10 வருடத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மர்ம முட்டை!!! பதில் கிடைத்து விட்டது!!!

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

 

10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான மர்ம முட்டை குறித்து விஞ்ஞானிகள் எந்தத் தகவலும் தெரியாமல் விழித்து வந்தனர். பார்ப்பதற்கு காற்று வெளியேறிய கால்பந்து போலவே அந்த முட்டையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தனை வருடங்களும் இது எந்த விலங்கினத்தின் முட்டை. எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்ற குழப்பம் நீடித்து வந்தது. தற்போது இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தீர்த்து வைத்து இருக்கின்றனர் என்று பிபிசி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

68 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெரிய கடல் ஊர்வன விலங்கின் முட்டையாக இருக்கலாம் என்ற முடிவினை தற்போது ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர். இதுவரை நாம் பார்த்த முட்டை வடிவத்தில் இது மிகவும் பெரிது எனவும் கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு சிலி நாட்டின் கடற்கரை பகுதியில் இந்த முட்டை கண்டுபிடிக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் முட்டை என்று விஞ்ஞானிகள் கருதவில்லை. 2018 இல்தான் இது ஒரு முட்டை என்பதையே விஞ்ஞானிகளால் ஊகிக்க முடிந்தது. மேலும் இந்த முட்டையை ஈன்ற உயிரினம் சுமார் 7 மீட்டர் நீளம் கொண்டிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சீனப் பெருஞ்சுவரை உடைப்போம்: பார்த்திபன் டுவிட்டால் பரபரப்பு

இந்திய-சீன எல்லையான லடாக் அருகில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய சீன ராணுவ வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் இருந்து 20

கல்வான் பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் வெடித்தது எப்படி??? செயற்கைக்கோள் புகைப்படம்!!!

இந்தியா தற்போது எல்லைப் பகுதியில் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது

காணாமல் போன கொரனோ நோயாளி: ஒரு வாரம் கழித்து கழிவறையில் கண்டுபிடித்ததால் அதிர்ச்சி 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரம் கழித்து அந்த நோயாளியின் இறந்த உடல் கழிவறையில்

வீட்டில் இடம் இல்லை: 7 நாட்கள் பொதுகழிப்பறையில் தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதை அடுத்து தமிழகத்தில் இருந்து புவனேஸ்வர்