17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பிரபல சீரியல் நடிகர் கைது!

  • IndiaGlitz, [Saturday,June 05 2021]

17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகப் பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் பேர்ல் வி புரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். இவருடன் சேர்த்து அவரது நண்பர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் “நாகின்“ எனும் சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஹிட்டானதை அதன் 2, 3, 4, 5 எனத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் ஒளிப்பரப்பட்டு வருகின்றன. தமிழிலும் இந்த சீரியல் “நாகினி” என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது. இதன் 3 ஆவது பாகத்தில் கதாநாயகனாக நடித்தவர்தான் பேர்ல் வி புரி. இவர் நாகின் சீரியல் தவிர பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.

இவர் மீது 17 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்து உள்ளார். இந்தப் புகாரை அடுத்து பேர்ல் வி புரியை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்றிரவு கைது செய்துள்ளனர். இவருடன் சேர்த்து இவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் அபிராமியின் த்ரோபேக் கிளாமர் புகைப்படங்கள்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி வெங்கடாச்சலம் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் முதலில் கவினை காதலித்து அதன்பின் டைட்டில் வின்னர் முகினை

ஒருதலைக்காதல்...! கொலையுண்ட இளைஞர் மற்றும் இளம்பெண்...!

காதலிக்க  மறுத்த இளம்பெண்ணை, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் படுகொலை செய்துள்ளார்.

தீ விபத்து… 36 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர்… முதல்வர் நேரில் பாராட்டு!

சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

'தி பேமிலி மேன் 2’ தொடரை சட்டரீதியாக தடுப்போம்....! சீமான் பரப்பரப்பு அறிக்கை....!

தமிழர்களுக்கு எதிராக வெளியாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை, சட்ட ரீதியாக தடை செய்ய களமிறங்கி போராடுவோம். ஜனநாயகப்பூர்வமாக அதைத்தடுத்து நிறுத்துவோம் என்றும்

கோவின் செயலியில் இனி தமிழ் இருக்கும்… மத்திய அரசு உறுதி!

கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு முன்பு பதிவு செய்யும் வகையில் கோவின் இணையத்தளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.