'நானே வருவேன்' படத்திற்கும் இவர்தான் வில்லனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்’ படத்திற்கும் வில்லன் ஒரு பிரபல இயக்குனர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தை இயக்குவது மட்டுமின்றி இந்த படத்தில் வில்லனாகவும் செல்வராகவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று செல்வராகவன் தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டரில் ’இயக்கத்தில் சிகரம் தொட்ட செல்வராக்வன் நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்’ என கூறியதோடு, ‘நானே வருவேன்’ புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் தனுசுடன் செல்வராகவனின் அட்டகாசமான போஸ் உள்ளதை அடுத்து இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது என்பதும் சாணிக்காகிதம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

More News

பிக்பாஸ் அல்டிமேட்: வைல்ட்கார்ட் எண்ட்ரியாக இந்த நடிகையா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ள நிலையில் இன்று மூன்றாவதாக ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கும் நடிகை!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகை ஒருவர் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

விஜய்-வெற்றிமாறன் படம் எப்போது? ஜிவி பிரகாஷ் தகவல்

தளபதி விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது அடுத்த படத்தை வம்சி இயக்க உள்ளார் என்பதும், அதேபோல் 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும்

செம படமாக இருக்கும்: அஜித்-சுதா கொங்காரா படம் குறித்து ஜிவி பிரகாஷ்!

அஜித் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.

 தனுஷ் குடும்பத்தினர்களையே அசர வைத்த ஐஸ்வர்யா ரஜினியின் பதிவு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு தனுஷின் டும்பத்தினர்களையே அசர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.