நடிகர் சங்க தேர்தல் வழக்கின் தீர்ப்பு எப்போது? 

  • IndiaGlitz, [Friday,October 18 2019]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளது

இந்த வழக்கின் விசாரணை கடந்த 15ஆம் தேதி நடைபெற்றபோது ’நடிகர் சங்க தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் இந்த தேர்தல் செல்லாது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதால் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வியாழன் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அன்றைய தினம் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவது குறித்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் ‘பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது

More News

கமல்ஹாசனுக்கு மரியாதை செலுத்திய சிவாஜி குடும்பத்தினர்

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விரைவில் திரையுலகினர்

மருமகனின் அண்ணனை திருமணம் செய்த மாமியார்: பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் மனு:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு 37 வயது பெண் தனது மருமகனின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு இந்த திருமணத்திற்கு உறவினர்கள் மிரட்டல் விடுத்ததாகவும்

பிகில்' படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி இல்லையா?

கடந்த சில வருடங்களாக முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் மட்டுமன்றி அனைத்து நடிகர்கள் நடித்த படங்களும் அதிகாலை காட்சி திரையிடுவதை திரையரங்கு

'பிகில்' படம் குறித்து அர்ச்சனா கல்பாதியின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரித்த விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உச்சகட்ட

'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்!

சமீபத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில், 'அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து