close
Choose your channels

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' நடிகர் திருமணம்: முதல்வர் நேரில் வந்து வாழ்த்தியது ஏன்?

Saturday, November 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபலங்களின் திருமணங்களுக்கு மட்டுமே செல்லும் முதல்வர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடித்த நடிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

விஜய் சேதுபதி நடித்த ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் நடிகர் ராஜ்குமார். இவர் ’நவீன சரஸ்வதி சபதம்’ ’நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ ’ஜிகர்தண்டா’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் வெப் தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜ்குமார் சஜூ என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் இரு தரப்பு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து நேற்று இவர்கள் திருமணம் சென்னையில் நடந்தது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

மணமகன் ராஜ்குமார் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மெய்க்காப்பாளர் கோபால் என்பவரின் மகன் என்பதால்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.