'பொன்னியின் செல்வன்'  நடிகையுடன் டேட்டிங் செல்கிறாரா நாக சைதன்யா?

  • IndiaGlitz, [Monday,June 20 2022]

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் தெலுங்கு பிரபல நடிகருமான நாகசைதன்யா ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நடிகையுடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஆன நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதிகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா ஜுப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ள நிலையில் அந்த பங்களாவுக்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலான நிலையில் இருவரும் டேட்டிங் செல்வதாகவும் கூறப்பட்டது.

நடிகை ஷோபிதா துலிபாலா, பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விண்ணை தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்துவிட்டேன்: இளம் நடிகர் வருத்தம்

 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தில் நான்தான் நடித்திருக்க வேண்டும் என்றும் அந்த படத்தை நான் மிஸ் செய்து விட்டேன் என்றும் இளம் நடிகர் ஒருவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். 

கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற நடன இயக்குனர்கள் தம்பதி!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருக்கும் தம்பதிகள் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றதோடு, அவருடைய 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

அஜித்தின் 'ஏகே 61' படத்துடன் மோதும் 2 பிரபல நடிகர்களின் படங்கள்!

அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகே 61' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதே தினத்தில் இரண்டு

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

உலக நாயகன் கமலஹாசன் நடித்த சூப்பர் ஹிட் படமான 'விக்ரம்' திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டிய 400 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா பிரியங்கா?

விஜய் டிவி தொகுப்பாளினி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவர் பிரவீன் குறித்து பேசாமல் இருப்பதும்