close
Choose your channels

நகுல் மனைவிக்கு இவ்வளவு திறமையா? வைரல் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

Wednesday, September 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி பாஸ்கர் மிக அழகாக பாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் நகுலின் மனைவி இவ்வளவு அழகாக பாடுவாரா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து அந்த பதிவுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு இவர் ’காதலில் விழுந்தேன்’ ’மாசிலாமணி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது ’எரியும் கண்ணாடி’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நகுல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது தனது மனைவி பாடும் பாடல்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அஜித் நடித்த ’அமர்க்களம்’ படத்தில் இடம்பெற்ற உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடலை ஸ்ருதி பாஸ்கர் மற்றும் நகல் பாடும் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. இந்த பதிவு குறித்து ஸ்ருதிஇன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:

இறுதியாக, தூக்கமில்லாத இரவுகள் மற்றும் சோர்வுற்ற பகல்களுக்கு மத்தியில் எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பதிவு செய்தோம்! அகிரா வீடியோவில் உட்கார வர மறுத்து, நாங்கள் பதிவு செய்யும் போது எங்கள் தொலைபேசியை கூட தள்ளினார்! நாங்கள் பாடும் போது அமோர் பேசுவதை பின்னணியில் நீங்கள் கேட்கலாம்’ என்று பதிவு செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.