'எஸ்கே' படத்தின் அட்டகாசமான டைட்டில் இதோ!

  • IndiaGlitz, [Monday,August 12 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்பதுதான். முன்னதாக இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' என்ற டைட்டில் வைக்கப்படவிருப்பதாகவும் இந்த டைட்டிலுக்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் 'செப்டம்பர் கொண்டாட்டம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து இதுவொரு கிராமத்து ஆக்சன் கதையம்சம் கொண்ட திரைப்படம் என தெரிகிறது.

More News

தல 60' திரைப்படம் எப்படி இருக்கும்? போனிகபூர் பேட்டி!

தல அஜித் நடித்த 59-வது படமான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய்சேதுபதி கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் எதிர்ப்பு:

காஷ்மீர் பிரச்சனையை உள்துறை அமைச்சர் அமித்ஷா சரியாக கையாண்டதாக நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிலையில்,

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் செகண்ட் இன்னிங்ஸ்: மீண்டும் பிரளயமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு வாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர் வனிதா. இவர் இருந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட அனைவரிடமும் சண்டை போட்டுவிட்டார்.

ரஜினி கூறிய உவமைக்கு அதிர்ச்சி அடைய தேவையில்லை: திருமாவளவன்

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

'நேர்கொண்ட பார்வை' இக்காலத் தேவை: ஒரு காவல்துறை உயரதிகாரியின் பதிவு

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.