close
Choose your channels

'எஸ்கே' படத்தின் அட்டகாசமான டைட்டில் இதோ!

Monday, August 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்பதுதான். முன்னதாக இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' என்ற டைட்டில் வைக்கப்படவிருப்பதாகவும் இந்த டைட்டிலுக்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் 'செப்டம்பர் கொண்டாட்டம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து இதுவொரு கிராமத்து ஆக்சன் கதையம்சம் கொண்ட திரைப்படம் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.