'நண்பன்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தளபதி 65'

  • IndiaGlitz, [Thursday,February 18 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 65’ திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ், யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ’தளபதி 65’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் அவர் தனது கம்போசிங் பணியை துவங்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு அனேகமாக மனோஜ் பரமஹம்சா என்பவர் ஒளிப்பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே இவர் விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய ’நண்பன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் தற்போது உருவாகிவரும் பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த பிறந்த நாள் பரிசு: அப்படி என்ன இருக்குது அதுல?

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தான் நடித்துக்கொண்டிருக்கும் 'டான்' படத்தின் குழுவினர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய போது 'டான்' படக்குழுவினர் கொடுத்த ஒரு பிறந்த நாள் பரிசை பார்த்து

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அஜித்: என்ன காரணம்?

அஜித் நடித்த வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மணி நேரமாக அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டாச்சு, அடுத்து யுவன் பாடலுக்கு போகலாமா? பிரபல தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'அயலான்' படத்தின் சிங்கிள் பாடலான 'வேற லெவல் சகோ' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

10 ஆண்டாக திருமணத்தை மறைத்தது ஏன்? 'குக் வித் கோமாளி' பிரபலம் விளக்கம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் குக்'களும், கோமாளிகளும் தரும் நகைச்சுவை நான் ஸ்டாப்பாக இருப்பதால்

Meetoo புகாரில் அவதூறு எதுவும் இல்லை- முன்னாள் பாஜக அமைச்சருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு!

கடந்த சில வருங்களுக்கு முன்பு பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் இடத்தைப் பிடித்தது Meetoo.