close
Choose your channels

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த பிறந்த நாள் பரிசு: அப்படி என்ன இருக்குது அதுல?

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தான் நடித்துக்கொண்டிருக்கும் ’டான்’ படத்தின் குழுவினர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய போது ’டான்’ படக்குழுவினர் கொடுத்த ஒரு பிறந்த நாள் பரிசை பார்த்து நெகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’டான்’. இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அப்போது படக்குழுவினர் ஒரு புகைப்படத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார்கள்.

அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது மனைவி மகளுடன் இருப்பது மட்டுமின்றி அருகில் தாய் மற்றும் தந்தையும் இருக்கும் புகைப்படமாக இருந்தது. தனது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த நிலையில் அவரது ஒவ்வொரு நினைவையும் அவர் பல நிகழ்ச்சியிலும் கூறி வந்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் தனது தாய், தந்தையும் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து அவர் நெகழ்ச்சி அடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.