நடிகர் சங்கத்திற்கு 'தல' தீபாவளி - நாசர்

  • IndiaGlitz, [Friday,November 06 2015]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுபேற்ற நாசர் அணியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கவுள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி கமல், ரஜினி உள்பட சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3500 பேர்களுக்கு வேட்டி அல்லது சேலை மற்றும் இனிப்புகள் அடங்கிய தீபாவளி பரிசு இன்று வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பரிசை பெற்று சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்களிடையே பேசிய நாசர், 'நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இது ஒரு 'தல' தீபாவளி' என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வந்து பரிசுகளை பெற முடியாத உறுப்பினர்களுக்கு அவர்களுடையே வீடுகளுக்கே பரிசுப்பொருட்கள் சென்றடைய ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

ஜப்பானில் வேதாளம் ரிலீஸ் தேதி?

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

'வேதாளம்' டிரைலர் ரிலீஸ் எப்போது?

அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவராதது...

பாகுபலி'க்கு இணையாகுமா 'பஜிராவோ மஸ்தானி'?

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை வாரிக்குவித்த 'பாகுபலி' படத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய போஸ்டர் அடித்து கின்னஸ் சாதனை...

'விஜய் 59' படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்திற்கு 'வெற்றி' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில்...

'விஜய் 59' படத்தின் டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் டைட்டில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி தினத்தில்...