close
Choose your channels

'வேதாளம்' டிரைலர் ரிலீஸ் எப்போது?

Friday, November 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவராதது அஜீத் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை இந்த படத்தின் டிரைலர் வெளியாகலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்னும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர்களிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகாததால், ரசிகர்கள் படத்தை நேரடியாக பார்க்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'வேதாளம்' படத்தின் முதல் நாள் டிக்கெட்டுக்கள் மின்னல் வேகத்தில் புக் ஆகிவிட்டது. சென்னை மாயாஜால் 'வேதாளம்' படம் 61 காட்சிகள் திரையிடவுள்ளன. மேலும் சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் அதிகபட்ச காட்சிகள் இந்த படம் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.