நாசர் மகனை ஹீரோவாக்கும் பிரபல தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Sunday,November 01 2020]

அட்டகத்தி, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உள்பட பல திரைப்படங்களை சிவி குமார் தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சிவி குமார் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனின் தயாரிப்பில் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் அக்சராஹாசன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை கேபிள்சங்கர் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல திறமையுள்ள இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய சிவி குமார் தற்போது நாசர் மகனையும் ஹீரோவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டிஸ்கோ டிரஸ், ஜங்கிள் தீம்: வைரலாகும் அமலாபால் பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள்!

தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அமலாபால் என்பது தெரிந்தது.

சூர்யாவின் அடுத்தடுத்த மூன்று படங்கள்: அவரே அளித்த பேட்டி!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான மிகப்பெரிய எதிர்பார்க்கக்குரிய திரைப்படமான 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே 

நாங்கள் சிறப்பான ஜோடி: பிரபல நடிகரை குறிப்பிட்டு சொன்ன குஷ்பு!

பிரபல நடிகருடன் தான் நடிக்கும் போது தங்களை சிறப்பான ஜோடியாக ரசிகர்கள் மனதில் வைத்து இருந்தார்கள் என்று குஷ்பு குறிப்பிட்டு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

முடிவு செய்யுங்கள், முடிவு சொல்லுங்கள்: மதுரையை கலக்கும் ரஜினி ரசிகர்களின் போஸ்டர்கள்!

சினிமா நடிகர்களை அரசியலுக்கு வர சொல்லும் போஸ்டர் கலாச்சாரம் மதுரையில் இருந்து தான் தொடங்கும் என்பது தெரிந்ததே

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் இமயம்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அடுத்தகட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்குகிறது என்றாலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது