தனுஷ்-மாரி செல்வராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2019]

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியானது என்பதும் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’பட்டாஸ்’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 16ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை அடுத்து அவர் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க பிரபல நடிகரும் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நட்டி நட்ராஜ், சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லால், ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடிக்கவிருக்கும் இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையில், கலைப்புலி தாணு தயாரிப்பில் தயாராகவுள்ளது என்பது தெரிந்ததே

More News

'குறும்பா' பாடலுக்கு பின் இதுதான்: டி.இமான் வெளியிட்ட தகவல்

தமிழ் திரையுலகின் மெலடி கிங் என்று பெயரெடுத்த இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தற்போது 'தலைவர் 168' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. 

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர்!

மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து உள்ளனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம்.

அமிதாப் அறிவுரையை கடைபிடிக்க தவறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா

கேரள அரசு, அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அல்ல..! - முதல்வர் பினராய் விஜயன்

கேரள அரசு, அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டது என்றும் ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

ஒரிஜினலாவே நான் வில்லன்ம்மா: சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' டிரைலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில்