நட்டி நட்ராஜின் 'போங்கு': திரை முன்னோட்டம்

  • IndiaGlitz, [Saturday,May 27 2017]

'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த அடுத்த படம் தான் 'போங்கு' நட்டி நட்ராஜுடன், ரூஹி சிங், சுமன், பூஜா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படம் கார் திருடர்களின் கதை என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தாஜ் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'போங்கு' டிராவலிங் பற்றிய படம். சாலைகளில் அதுவும் நே‌ஷனல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பறபறன்னு பறக்கும். நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி கேரக்டர் அப்படியே பொருந்திவிட்டது. படம் ஜூன் 2ல் வெளியாகிறது. நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். போங்கு' படத்துக்கும் அது கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியபோது, 'இந்த படத்தில் ரோல்ஸ்ராய் கார் ஒன்று ஒரு கேரக்டராகவே வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நாடு முழுவதும் தேடி கடைசியாக ஐதராபாத்தில் உள்ள பிரமாண்டமான கார் ஷோரூம் ஒன்றில் முக்கிய காட்சிகளை படமாக்கினோம். கிளைமாக்ஸ் காட்சியை கொளுத்தும் வெயிலில், புழுதி பறக்க படமாக்கினோம். இந்த காட்சிகள் திரையில் தோன்றும்போது அனல் பறக்கும் என்றும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் அமைந்த ஒரு ஆக்சன் படம் என்றும் கூறியுள்ளார்.

ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் தேவா இசையில், கபிலன், தாமரை, மதன்கார்க்கி பாடல் வரிகளில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. 'சதுரங்க வேட்டை' போலவே நட்டிக்கு இந்த படம் திருப்புமுனை படமாக அமையுமா என்பதை வரும் வெள்ளியன்று இந்த படத்தின் திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

More News

ஒரு கிடாயின் கருணை மனு: திரை முன்னோட்டம்

'பாகுபலி 2', '2,0' , சங்கமித்ரா போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் டிரெண்ட் ஆகி வரும் கோலிவுட் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களும் அவ்வப்போது வெளியாகி நல்ல வரவேற்பையும் லாபத்தையும் விருதுகளையும் குவித்தது உண்டு. அதற்கு உதாரணமாக 'காக்கா முட்டை' படத்தை கூறலாம்

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தம்பதிக்கு மணிவிழா வாழ்த்துக்கள்

இந்து மதத்தை சேர்ந்த தம்பதியர்களில் ஆண்களுக்கு 60 ஆம் வயதில் "அறுபதாம் கல்யாணம்" என்கிற பெயரில் நடத்தப்படும் விழா "ஷஷ்டியப்த பூர்த்தி" அல்லது "மணிவிழா" என்று அழைக்கப்படுகிறது.

நயன்தாரா என்னை தடுத்துவிட்டார். 'அறம்' இயக்குனர் கோபிநயினார்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கிய 'அறம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தளபதி 61: விஜய்க்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான படம்: ஏன் தெரியுமா?

இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் விஜய்க்கும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமான படமாக கருதப்படுகிறது. எப்படி என்பதை இப்போது பார்ப்போம்...

வெங்கட்பிரபுவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்களை வேட்பாளர் அறிவிப்பு போன்று அவர் பலகட்டமாக வெளியிட்டு வருகிறார்...