'தடம்' வெற்றியால் 'மூடர் கூடம்' இயக்குனருக்கு கிடைத்த நம்பிக்கை!

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் அவருடைய முந்தைய முடங்கி போன படங்கள் எல்லாம் தூசு தட்டி எழுப்பப்படும். அதேபோல் அவர் நடித்து கொண்டிருக்கும் மற்ற படங்களும் முக்கியத்துவம் பெறும்

அந்த வகையில் சமீபத்தில் வெளியான அருண்விஜய்யின் 'தடம்' மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவர் நடித்து நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் 'வா டீல்' படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் 'மூடர் கூடம்' இயக்குனர் நவீன் இயக்கி வரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் அருண்விஜய் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தில் அருண்விஜய் கேரக்டர் குறித்து இயக்குனர் நவீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 'அக்னி சிறகுகள்' படத்திற்காக அருண்விஜய்யை முதன்முதலில் டெஸ்ட்லுக் எடுத்தபோதே அவரை தவிர வேறு யாரும் இந்த கேரக்டருக்கு பொருந்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனி, அருண்விஜய் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் 'அக்னி சிறகுகள்' படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வரும் இந்த படத்திற்கு அச்சுராஜாமனி இசையமைக்கின்றார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

விஜய் ஆண்டனி படத்தில் ரீஎண்ட்ரியாகும் 'பாலா' பட நடிகை

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா பட நாயகிகளில் ஒருவர் சங்கீதா. 'பிதாமகன்' படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா! முக்கிய அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கோரிக்கை

அதிமுகவில் கூட்டணியில் முதல் ஆளாக இணைந்து 7 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் பெற்ற பாமக, இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

யாரும் ஓட்டு போடாதீங்க: பொள்ளாச்சி பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் அறந்தாங்கி நிஷா

பொள்ளாச்சி பாலியல் பிரச்சனை தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்து பிரபலங்களும் தங்களுடைய ஆத்திரத்தை கொட்டி தீர்த்துவிட்டனர்

மக்களவை தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

வரும் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,

ஒரு மணி நேரம் அதகளப்படுத்தும் யோகிபாபு: 'பட்டிபுலம்' படம் குறித்து இயக்குனர்

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் "பட்டிபுலம்" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.