close
Choose your channels

விஜய் ஆண்டனி படத்தில் ரீஎண்ட்ரியாகும் 'பாலா' பட நடிகை

Friday, March 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா பட நாயகிகளில் ஒருவர் சங்கீதா. 'பிதாமகன்' படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதேபோல் ஜி.சிவா தயாரித்த 'தனம்' உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்த நடிகை சங்கீதா தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் மீண்டும் ஒருசிறிய இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகிறார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் 'தனம்' படத்தை தயாரித்த சிவாவின் மனைவிதான் 'தமிழரசன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதுதான்.

'தமிழரசன்' படத்தில் சங்கீதாவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் அளவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும், இந்த படம் வெளிவந்தவுடன் மீண்டும் சங்கீதா, தமிழ்த்திரையுலகில் ஒரு சுற்று வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாபுயோகேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார். கடந்த ஜனவரி முதல் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்தில் சுரேஷ் கோபி, சென்றாயன், ராதாரவி, சோனு சூட், சாயாசிங், கஸ்தூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இசையில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் ஒரு குடும்ப மற்றும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம் ஆகும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.