மகாபாரத 'திரெளபதி' கேர்கடரில் நயன்தாரா?

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை அடுத்து 'சங்கமித்ரா' உள்பட பல சரித்திர படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் கன்னடத்தில் தயாராகி வரும் 'குருஷேத்திரா'. மகாபாரத கதையை இயக்குனர் நாகண்ணா பிரமாண்டமாக இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் துரியோதனன் கேரக்டரில் தர்ஷன், கர்ணன் கேரக்டரில் ரவிச்சந்திரன், பீஷ்மர் கேரக்டரில் அம்ரீஷ் நடித்து வருகின்றனர்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த படத்தில் திரெளபதி கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நயன்தாரா விரைவில் இந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா 'சூப்பர்' என்ற கன்னட படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால் இது அவருக்கு இரண்டாவது கன்னட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காஜல் அகர்வாலை தேடி வரும் எம்.எல்.ஏ வாய்ப்பு

அஜித்துடன் விவேகம்' மற்றும் விஜய்யுடன் 'மெர்சல்' படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு 'எம்.எல்.ஏ' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...

காத்ரினா கைஃப் விரும்பும் இரண்டு தென்னிந்திய ஸ்டார்கள்

பாலிவுட்டின் முன்னணி நாயகியான காத்ரினா கைஃப், தென்னிந்திய மொழிகளான தமிழ், அல்லது தெலுங்கு படத்தில் நடிக்க நேர்ந்தால் விக்ரம் மற்றும் பிரபாசுடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்...

பிக்பாஸ்: தலைவர் பதவியை இழந்தார் சினேகன், புதிய தலைவர் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இதுவரை தலைவராக இருந்த பாடலாசிரியர் சினேகன் பதவி நீக்கப்பட்டு புதிய தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

அமெரிக்காவில் அரசியல் ஆலோசனை செய்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் குறித்து சில பரபரப்பான கருத்துக்களை கூறினார்.

மேற்குவங்கத்தில் ஜிஎஸ்டியில் தள்ளுபடி: திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரியால் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மேற்குவங்க மாநில அரசு திரையரங்க கட்டணத்தில் மாநில அரசின் சார்பில் தள்ளுபடி வழங்கியுள்ளது.