நயன்தாராவின் இரட்டை மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Saturday,August 29 2015]

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாராவுக்கு நேற்று இரட்டை மகிழ்ச்சியான நாள். அவர் நடிப்பில் நேற்று வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம் ஊடகங்களில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது மட்டுமின்றி நயன்தாராவின் நடிப்புக்கும் பாராட்டு மழை குவிந்தது, மற்றொன்று நேற்று ஓணம் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொச்சியில் கொண்டாடியது.

இந்த இரட்டை மகிழ்ச்சியினால் சந்தோஷத்தில் மூழ்கியிருந்த நயன்தாரா, நேற்று முதல் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்கும் 'சோலமாண்டே கூடாரம் என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்த படத்தை ஏ.கே.சாஜன் இயக்கி வருகிறார்.

மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள 'புரூஸ்லீ' படத்தில் நயன்தாரா, நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது நயன்தாரா, இப்போதைக்கு ஜி.வி.பிரகாஷ் படம் உள்பட வேறு புதிய படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் தற்போது 'இது நம்ம ஆளு', 'நானும் ரெளடிதான்', 'காஷ்மோரா' மற்றும் 'திருநாள்' ஆகிய படங்களில் மட்டும் நடித்து வருவதாகவும், அவர் நடித்து முடித்துள்ள மாயா' விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே ஜி.வி.பிரகாஷ் படத்தில் நயன் நடிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

More News

பாண்டியராஜின் 'ஹைக்கூ' படத்தின் புதிய டைட்டில்?

பாண்டியராஜ் இயக்கியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் பெயரை தமிழில் மாற்றுவதற்கு சிறந்த டைட்டில்களை...

'சின்ன கேப்டன்' விஷால் பிறந்த நாள். ஒரு சிறப்பு பார்வை

விரைவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் சங்கத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படும் இளையதலைமுறை நடிகர்...

விஜய் விஷயத்தில் சிம்புவை பின்பற்றிய விக்ராந்த்

மூன்று வருடங்கள் கழித்து கடுமையான பல சோதனைகளை சந்தித்து சிம்புவின் 'வாலு' படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது....

வித்யா பாலன் இடத்தை பிடித்தாரா லட்சுமி மேனன்?

'விஐபி 2' படத்தை அடுத்து தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்....

'10 எண்றதுக்குள்ள' ராஜஸ்தான் படப்பிடிப்பு முடிந்தது

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வந்த நிலையில்....