வெள்ளம் பாதித்த வேளச்சேரி மக்களுக்கு உதவி செய்த நயன்தாரா.. வைரல் வீடியோ..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சார்பில் வெள்ளம் பாதித்த வேளச்சேரி பகுதி மக்களுக்கு உதவி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை நயன்தாரா சமீபத்தில் ’பெமி 9’ என்ற நிறுவனத்தை தொடங்கினார் என்பது தெரிந்ததே. இந்த நிறுவனத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
உணவு, குடிநீர் மற்றும் சானிடரி நாப்கின் வழங்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்று நயன்தாராவுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இதுகுறித்து ’பெமி 9’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா ஏற்கனவே தனது பிறந்த நாளின் போதும், கணவர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளின் போதும் பொது மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)