'பாகுபலி'யின் அடுத்த பாகத்தில் இணையும் நயன்தாரா!

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த திரைப்படங்கள் இந்தியாவிலேயே அதிக வசூலான திரைப்படங்கள் பட்டியலில் இணைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பாகுபலி’ முதல் பாகத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும், ஆனால் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்காக உருவாக இருப்பதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும் ஒரு ஆச்சரிய தகவலாக ’பாகுபலி’யின் முந்தைய பாக வெப்தொடரில் முக்கிய வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாராவின் முதல் நேரடி ஓடிடி வெப்தொடரும் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களின் பிரம்மாண்டத்திற்கு கொஞ்சமும் குறையாமல் இந்த வெப்தொடரும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த தொடருக்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட் பழம்பெரும் நடிகை உயிரிழப்பு!

சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சுரேகா

கம்பி கட்டுற கதை விட்ட சௌமியா....! பணம் முதல் 3 திருமணம் வரை செய்த தில்லாலங்கடி..!

திருமணம் செய்துவிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளார் சௌமியா. அதுவும் மாஜி அமைச்சரின் பெயரைச் சொல்லி, பித்தலாட்டம் செய்தது அம்பலமாகியுள்ளது.

பாலியல் தொல்லை தந்த பாஜக பிரமுகர்...! புகார் கொடுத்ததால் கத்திக்குத்து.....!

மயிலாடுதுறை மாவட்டத்தில்,  குத்தாலம் பக்கத்தில் இருக்கும் கோழிகுத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான், 60 வயது நிரம்பிய பாஜக நிர்வாகி மகாலிங்கம்

திருமணம் எப்போது? ரசிகரின் கேள்விக்கு பிக்பாஸ் சனம்ஷெட்டியின் பதில்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சனம்ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் உங்களது திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு அவர் விரக்தியுடன் பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'உறியடி' விஜயகுமாரின் அடுத்த படம்: இன்று படப்பிடிப்பு தொடக்கம்!

'உறியடி' மற்றும் 'உறியடி 2' ஆகிய இரண்டு படங்களை இயக்கி நடித்த விஜயகுமாரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது