close
Choose your channels

நயன்தாராவின் பிறந்த நாளில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட க்யூட் வீடியோ..!

Saturday, November 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள க்யூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்த நாளை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நயன்தாராவின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை விக்னேஷ் சிவன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய பிறந்த நாளின்போது, ‘ஹாப்பி பர்த்டே மை உயிர் அன்ட் உலகம்’ என்ற கேக் வீடியோவை வெளியிட்டு அதில் ’எனது உயிர் மற்றும் உலகம் நீதான், உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய அழகிய மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு நீயே காரணம். நீ என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்’ என்ற பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நயன்தாராவின் 75 வது திரைப்படம் ’அன்னபூரணி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் அவர் நடித்து வரும் இன்னொரு படமான ‘தி டெஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, மிஷ்கின் உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ’லியோ’ படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment