வதந்திகளை ஒரே ஒரு புகைப்படத்தால் அடித்து நொறுக்கிய நயன்தாரா.. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பயணம்..!

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

நடிகை நயன்தாரா தனது கணவரை பிரியப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் இந்த வதந்திகளை ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அடித்து நொறுக்கி உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் நடிகை நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை அடுத்து இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்று சமூக வலைதளங்களில் ஒரு சிலர் வதந்தி பரப்பி விட்டனர். அதுமட்டுமின்றி நேற்று நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’நான் முக்கியமான ஒன்றை இழந்து விட்டேன்’ என்றும் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பிரியப்போகிறார்கள் என்ற வதந்தியை அடித்து நொறுக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை தற்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர், உலகு ஆகியோர்களுடன் அவர் விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து ’நீண்ட இடைவேளைக்கு பிறகு என்னுடைய பாய்ஸ்களுடன் பயணம் செய்கிறேன்’ என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் இருவருமே சந்தோசமாக இருக்கும் நிலையில் தன்னை பற்றி வெளி வந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

அடுத்தடுத்து இரண்டு பிரபலங்களை இயக்கும் மாரி செல்வராஜ்.. அப்ப ரஜினி படம் டிராப்பா?

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் படத்தை இயக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்தடுத்து இரண்டு பிரபல நடிகர்களின் படங்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?

நடிகர் அஜித் நேற்று சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை

மகா சிவராத்திரி: ஒளியும் இருளும் இணையும் புனித இரவு

மகா சிவராத்திரி, இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில், ஈசனை வழிபட்டு, அவரது அருளைப் பெறுவதற்காக பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

மகா சிவராத்திரியில் ராசிக்கேற்ப அபிஷேகம்: உங்கள் ராசிக்கு எது சிறந்தது?

மகா சிவராத்திரி, சிவனை வழிபட சிறந்த நாள். இந்த புனித நாளில், ராசிக்கேற்ப அபிஷேகம் செய்வதன் மூலம் ஈசனின் அருளைப் பெறலாம். உங்கள் ராசிக்கு எந்த பொருட்களால் அபிஷேகம் செய்யலாம் என்பதை இங்கே காணலாம்:

மகா சிவராத்திரியின் நான்கு கால பூஜை: ஒரு விரிவான பார்வை

மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகள் பற்றிய விவரம்: