நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்பட 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் ‘காட்பாதர்’ என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிருதிவிராஜ் - நயன்தாரா ஜோடி சேருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘கோல்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பகத்பாசில் மற்றும் நயன்தாரா நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளிவந்தது. ‘பாட்டு’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ‘கோல்ட்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
 

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' பட பாணியில் படத்தை தொடங்கும் அட்லி!

கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் பாணியில் அட்லி தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

விஷால் படங்களிலேயே அதிக பட்ஜெட் படம் இதுதான்; தயாரிப்பாளர் யார் தெரியுமா?

நடிகர் விஷால் நடித்து வரும் 31ஆவது திரைப்படம் 'வீர்மே வாகை சூடும்' என்ற திரைப்படம் என்றும் து.பா.சரவணன் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. 

பாரா ஒலிம்பிக் போட்டி: தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதக்கம்!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின்

ராஜ்குந்த்ரா ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டி எடுத்த அதிரடி முடிவு?

ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கணவர் ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி பிரிய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்