நயன்தாராவின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸா?

  • IndiaGlitz, [Monday,December 20 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’நெற்றிக்கண்’ ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் அவரது அடுத்த படமும் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று O2. இந்த படத்தை ஜிகே வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் O2 திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது

ஏற்கனவே ஹாட்ஸ்டார் ஓடிடியில் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ மற்றும் ’நெற்றிக்கண்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமும் ஹாட்ஸ்டாரில் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அதே நேரத்தில் நயன்தாராவின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் மாறுகிறதா சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி?

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை

தூங்கும்போது கூட கயிற்றை பிடித்திருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்: என்ன ஆச்சு?

தூங்கும் போது கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் கயிற்றை பிடித்திருக்கும் காட்சி இன்றைய முதல் புரோமோ வீடியோவில் உள்ளன. 

'தளபதி 66' படத்திற்காக செந்தில்-ராஜலட்சுமி பாடல் பாடியது உண்மையா? 

விஜய் நடித்து முடித்துள்ள 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் தளபதி விஜய்யின்

என்ன ஒரு தீர்க்கதரிசனம்: பிரியங்காவை கேலி செய்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேசன் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர்கள் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா இந்த நாட்டிலா?

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்