close
Choose your channels

நயன்தாராவை இப்படி போட்டோ எடுக்க விக்கியால் மட்டுமே முடியும்.. வேற லெவல் போட்டோஷூட்..!

Wednesday, May 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் ஹாங்காங் சுற்றுப்பயணம் செய்த போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இவ்வளவு அழகாக நயன்தாராவை போட்டோ எடுக்க விக்னேஷ் சிவன் ஒருவரால் மட்டுமே முடியும் என்று இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் ஜொலித்து வருகிறார் என்பதும் இப்போதும் அவர் இளம் நடிகைகளுக்கு பிசியாக மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் அவ்வப்போது கணவர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்யும் நயன்தாரா அங்கிருந்து கொண்டே அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா தனது குடும்பத்துடன் ஹாங்காங் சென்ற நிலையில் அந்நாட்டின் அழகை குறிப்பிடும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதேபோல் அவரது எக்ஸ் பக்கத்தில் விதவிதமான போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு அழகாக நயன்தாராவை விக்கியை தவிர வேறு யாராலும் புகைப்படம் எடுக்க முடியாது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இதனை அடுத்து இந்த புகைப்படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் எடுத்து இருப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ’டெஸ்ட் ’ யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ மற்றும் நிவின் பாலியுடன் ’டியர் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment