எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதற்கு ஈடு இணை கிடையாது: நயனின் 'அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,May 12 2024]

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளுடன் விளையாடும், கொஞ்சும் காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது சமூக வலைதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்படும் என்பதும் அவை க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் விளையாடும், கொஞ்சும் காட்சிகளை விக்னேஷ் சிவன் வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் தோளில் உட்கார்ந்து கொண்டு அவரது தலையில் தனது பிஞ்சு கைகளால் செம்ம அடி அடிக்கும் குழந்தை, அம்மாவுக்கு உதட்டு கொடுக்கும் காட்சி, இரண்டு குழந்தைகளுக்கு ஓடி விளையாடும் காட்சிகள் என இந்த வீடியோவில் பல க்யூட்டான காட்சிகளை இருப்பதை எடுத்து அன்னையர் தின ஸ்பெஷல் வீடியோவாக கருதப்படுகிறது.

இந்த வீடியோவுக்கு ’எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஒரு அன்னை என்று வந்துவிட்டால் குழந்தைகளை கொஞ்சும் போது அவரது முகத்தில் இருக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை கிடையாது’ என்றும் நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ், லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷ் குடும்பத்தில் இருந்து வந்த பாராட்டு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் 'ஸ்டார்' கவின்..!

நடிகர் கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் முதல் நாளே இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல்

ரஜினியின் 'கூலி' படத்தில் இணைகிறாரா 'குபேரா' நடிகர்? லோகேஷ் கனகராஜ் சம்பவம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும் அதுமட்டுமின்றி படக்குழுவினர் வெளியிட்ட முன்னோட்ட வீடியோ அட்டகாசமாக

அன்னையர் தினத்தில் நதியாவின் பதிவு.. அருகில் இருப்பது அவரது சகோதரியா?

இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் அரசியல் தலைவர்களும்

பா. ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்தது: பிரவீன் காந்தி

நடிகர் ரஞ்சித் நடித்த 'கவுண்டம்பாளையம்' என்ற திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய இயக்குனர் பிரவீன் காந்தி, 'பா ரஞ்சித், வெற்றிமாறன் வளர்ச்சிக்கு பிறகுதான் சினிமா தளர்ச்சி அடைந்தது

சன் டிவியில் 'டாப் குக்கு டூப் குக்கு' ஒளிபரப்பாகும் தேதி.. 'குக் வித் கோமாளி'யை மிஞ்சுமா?

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் நடந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும், இந்த சீசனில் வெங்கடேஷ் பட்