close
Choose your channels

'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் பேரனாக நடிக்கின்றாரா நயன்தாரா பட நடிகர்?

Wednesday, August 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதையும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிறைச்சாலை ஒன்றில் ஜெயிலராக ரஜினிகாந்த் இருக்கும் நிலையில், தீவிரவாதியான சிவராஜ்குமார் ஜெயிலில் உள்ள தீவிரவாதி ஒருவரை தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாகவும், அதனை ஜெயிலர் ரஜினிகாந்த் எப்படி தடுக்கின்றார் என்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி ஆகியோர் இணைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்ளிட்ட ஒருசிலர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் பேரன் கேரக்டரில் ரித்விக் என்ற குழந்தை நட்சத்திரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான நயன்தாராவின் 'O2’ என்ற படத்தில் அவருடைய மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment