close
Choose your channels

தீபாவளி வாழ்த்துக்களுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நயன்தாரா.. இணையத்தில் வைரல்..!

Sunday, November 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் தீபாவளி வாழ்த்துக்களுடன் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தற்போது மாதவன், சித்தார்த் இணைந்து நடிக்கும் ’டெஸ்ட்’ என்ற படத்தில் முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு நடித்த ’மண்டேலா’ என்ற திரைப்படத்தை தயாரித்த சசிகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். சாக்சி ஸ்ரீ கோபாலன் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகிய மூவரும் இந்த போஸ்டரில் இருக்கும் நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் திரையரங்குகளில் ரிலீசாகும் தேதி ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment