நயன்தாராவின் அடுத்த திரைப்பட ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Sunday,November 18 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் அஜித்தின் 'விஸ்வாசம்' உள்பட 7 படங்களில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரியில் பொங்கல் அன்று வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதே ஜனவரியில் நயன்தாரா நடித்த இன்னொரு படமான 'கொலையுதிர்க்காலம்' திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் நடித்து வரும் 'ஐரா' திரைப்படமும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என்பதால் அடுத்த வருட தொடக்கமே நயன்தாரா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் சிவகார்த்திகேயன் படம், மற்றும் சிரஞ்சிவியுடன் அவர் நடித்து வரும் 'சைரா நரசிம்மரெட்டி' ஆகிய படங்களும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதி படத்தில் நீதிபதியாக நடிக்கும் பிரபல இயக்குனர்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் தினமும் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.

தயாரிப்பாளர்கள் இந்த ஆபத்தை உணர வேண்டும்: எஸ்.ஆர்.பிரபு கோரிக்கை

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளியன்றும் குறைந்தது நான்கு படங்கள் வெளியாகி வருகிறது. அப்படி இருந்தும் ரிலீசூக்கு தயாராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சாதிகள் போகவில்லை, ஸ்வாதிகள்தான் இல்லாமல் போகிறார்கள்: கஸ்தூரி

தமிழகத்தில் சாதி வேறுபாடு காரணமாக ஆணவக்கொலைகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இந்த கொலைகளுக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் கொடுத்த போனஸ் பாடல்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தநிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது.

அக்சராவின் அந்தரங்க படங்கள் லீக் விவகாரத்தில் முன்னாள் காதலரிடம் விசாரணை

நடிகை அக்சராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அக்சராஹாசன் மும்பை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.