close
Choose your channels

சாதிகள் போகவில்லை, ஸ்வாதிகள்தான் இல்லாமல் போகிறார்கள்: கஸ்தூரி

Sunday, November 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் சாதி வேறுபாடு காரணமாக ஆணவக்கொலைகள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இந்த கொலைகளுக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. அந்த வகையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த நந்தீஷ்-ஸ்வாதி என்ற காதல் ஜோடி சமீபத்தில் ஆணவ கொலை செய்யப்பட்டனர். இந்த கொலையில் ஸ்வாதியின் தந்தை மற்றும் சில உறவினர்கர் கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்த ஜாதி ஆணவக்கொலை குறித்து நடிகை கஸ்தூரி தனது ஆவேச கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

தொடரும் வலி
மற்றுமோர் நரபலி !
பாழும் சாதி பேயின் ரத்த வெறிக்கு
இன்னும் எத்தனை சாவு எத்தனை காவு
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
பாடி கொண்டே பாரதியை
பாடி பாடியா மீட்டெட்டெடுக்கும் அவலம் ...
சாதிகள் இல்லாமல் போகவில்லை. அதை மறுக்கும்
ஸ்வாதிகள் இல்லாமல் போகிறார்கள். அதை தடுக்கும்
நீதிகள் கண்மூடி சாகிறது.
ஸ்வாதியையும் நந்தீஷையும் வெட்டி துண்டாடினீரே, இருவரின் ரத்தத்தில் என்ன வித்தியாசம் கண்டீர்? சொல்லுங்கள் , எமக்கு சொல்லுங்கள் !
மகளை மணந்தவனின் பிறப்பை மறக்காமல் அவன்
உயிரை குடித்த எமனின் ஏவல்களே,
கீழ்ஜாதி மேல்ஜாதி என்னும்
சீழ்பிடித்த கணக்கு பார்த்து
வாழ முனைந்தவர்தம் சிறகை சிதைத்த
பாழும் பேய்கள் என்ன ஜாதி?
கீழே மேலே என பிரித்து சொல்ல
வீழ்ந்த விலங்குகளுக்கு என்ன தகுதி?

ஏற்கனவே இந்த ஆணவக்கொலைக்கு இயக்குனர் பா.ரஞ்சித் உள்பட பலர் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.