இந்த ஒரு காரணத்திற்காக தான் ஆடியோ லாஞ்சுக்கு செல்வதில்லை: நயன்தாரா

  • IndiaGlitz, [Thursday,December 22 2022]

தமிழ் திரை உலகில் அஜித் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே தாங்கள் நடிக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வது இல்லை என்றும் படங்களில் ஒப்பந்தம் ஆகும் போதே புரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டோம் என்று ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தை அஜித் கிட்டத்தட்ட ஆரம்பம் முதலே கடைபிடித்து வரும் நிலையில் நயன்தாரா கடந்த சில வருடங்களாக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்லாதது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். ’நான் நடித்த ஆரம்பகட்ட படங்களில் நாயகியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாத படங்கள்தான் வந்துகொண்டு இருந்தன. அது ஒரு காலகட்டமாக இருந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றாலும் நடிகைகளை ஒரு ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக மேடையில் நம்மை பற்றி ஏதாவது பேசுவார்கள். எந்த விதத்திலும் நமக்கு அந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் இருக்காது. அதனால்தான் தான் எந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சிக்க்கும் நான் செல்வதில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை தொட்ட பிறகுதான் புரமோஷனுக்கு செல்லலாம் என்று இருந்தேன் என்றும் ஆனாலும் புரமோஷனுக்கு தற்போதும் செல்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் தற்போது அதிகமாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உருவாக்குகிறார்கள் என்றும் அதை நினைத்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் மும்தாஜ்: வைரல் வீடியோ

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மும்தாஜ் தற்போது மெக்கா புனித பயணம் சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கண்ணீருடன் பதிவு செய்த வீடியோ

ஆஸ்கர் விருதை நெருங்கிய  'ஆர்.ஆர்.ஆர்' : எந்த பிரிவில் தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை

மணிரத்னம் - சுஹாசினி தம்பதியின் மகனா இவர்? லண்டன் அலுவலகம் திறப்பு விழா புகைப்படங்கள்!

 தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் என்பதும் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படம் தமிழ் திரை உலகிலேயே மிக அதிக வசூல்

'வாரிசு' படத்தில் ஒரு சர்ப்ரைஸ் பாடல்.. மீண்டும் ஒரு 'ஆல்தோட்ட பூபதியா?

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது

அரைகுறை ஆடையுடன் இன்ஸ்டா ரீல் வீடியோ: பிக்பாஸ் நடிகையை கைது செய்த காவல்துறை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் தொலைக்காட்சி நடிகையுமான ஒருவர் அரைகுறை ஆடையில் இன்ஸ்டாகிராமில் ரீலுக்காக போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென