சுந்தர் சியின் அடுத்த படத்தில் நயன்தாரா பட வில்லன்!

சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா பட வில்லன் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர் சி நடித்து வரும் படங்களில் ஒன்று ‘ஒன் டு ஒன்’ என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. த்ரிஷா நடித்த ‘பரமபத விளையாட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கிய திருஞானம் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சுந்தர் சி ஜோடியாக ராகினி திரிவேதி நடித்து வரும் நிலையில் தற்போது முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுந்தர் சி ஏற்கனவே ’தலைநகரம் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது மட்டுமின்றி ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' சூப்பர் அப்டேட் தந்த கவுதம் மேனன்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம்.

மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்காரே பெருமைப்படுவார்: இசைஞானி இளையராஜா

பிரதமர் மோடியின் ஆட்சியை தற்போது அம்பேத்கார் பார்த்தால் அவரே பெருமைப்படுவார் என நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா பேசியுள்ளார் .

இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது: 'பீஸ்ட்' நினைவலைகளை பகிர்ந்த ஒளிப்பதிவாளர்!

இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது என தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் நினைவலைகளை ஒளிப்பதிவாளர் மனோஜ் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளார்.

நடன இயக்குனரின் குழந்தைகளுடன் தளபதி விஜய் ஆடும் மாஸ் நடனம்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடன இயக்குனரின் குழந்தைகளுடன் நடனமாடும் மாஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

அஜித்தின் 'ஏகே 61' படத்தின் மாஸ் அப்டேட்!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது