இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் சுமார் 3000 பேர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் சுமார் 1000 பேர்கள் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,391 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 176 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்தியாவில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1694ஆக அதிகரித்துள்ளதாகவும அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 14,183 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 984 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தை 49 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 5,104 பேர்களும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலக அளவில் 38,21,917 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 2,65,051 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#############
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments