விஜய் ரசிகர்களுக்கு போலீஸார் கடும் எச்சரிக்கை: களையிழந்த கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்றைய முதல் நாள் முதல் காட்சியின் போது விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் .

விஜய்யின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, மாலை அணிவிப்பது போன்ற கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் நெல்லையில் ’பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு அந்நகர போலீசார் தடை விதித்துள்ளனர் .

சமீபத்தில் ’பீஸ்ட்’ படத்தின் டிரைலர் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டபோது ரசிகர்களின் தாக்குதலால் அந்த திரையரங்கம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. இதனை அடுத்து திரையரங்குகளில் ’பீஸ்ட்’ படத்தின் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த நெல்லை போலீசார் கட் -அ வுட் வைக்கவும் திரையரங்குகளின் முன் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதித்துள்ளனர். இதனால் நெல்லையில் மட்டும் ’பீஸ்ட்’ பட கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது.

More News

மேக்கப்மேனால் ஏற்பட்ட பிரச்சனை, புத்திசாலித்தனமாக செயல்பட்ட ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ

தன்னுடன் பணிபுரிந்த மேக்கப்மேன் ஒருவரின் இன்ஸ்டாகிராமில் இருந்து வந்த மெசேஜால் ஏற்பட இருந்த பிரச்சனையிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பி விட்டதாக நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்துள்ள வீடியோ

பாடகர் வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனை: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

பாடகர் வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனைக்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேல்முருகன் குடும்பத்தாரை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தமிழுக்கு குரல் கொடுத்த சிம்பு-அனிருத்: வைரலாகும் டுவிட்!

சமீபத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தமிழுக்காக குரல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் தமிழுக்கு குரல் கொடுத்து

'பீஸ்ட்' வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த 'தளபதி 66' பட நடிகர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை முதல் காட்சியை பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன்

தமிழகத்தின் முக்கிய நகரில் 'பீஸ்ட்' ரிலீஸ் இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தின் முக்கிய நகரத்தில் 'பீஸ்ட்' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என அந்நகரத்தின் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.