ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்: தற்கொலை செய்த நெல்லை மாணவரின் கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தமிழகத்தில் மதுவினால் ஏராளமானோர் அடிமையாகியுள்ளதால் அவர்களது குடும்பம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது தந்தை மதுவுக்கு அடிமையாகியதால் ஏற்பட்ட விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது மரணத்திற்கு பின்னராவது மதுபான கடைகளை அடைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குடிகார தந்தை தனக்கு கொள்ளி வைக்கவோ, மொட்டை போடவோ கூடாது என்றும் அவர் கொள்ளி வைத்தால் தனது ஆத்மா சாந்தி அடையாது என்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ் வரும் 6ஆம் தேதி நீட் தேர்வு எழுதவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருங்கால டாக்டரின் உயிர் அவரது தந்தையின் குடிப்பழக்கத்தால் பரிதாபமாக இவ்வுலகை விட்டு சென்றுள்ளது. மாணவர் தினேஷின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைகளை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபல அரசியல்வாதிகள்

தல அஜித்தின் பிறந்த நாள் நேற்று அவரது ரசிகர்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விஜய்சேதுபதிக்கு உணவு ஊட்டிவிடும் சிம்பு: வைரலாகும் புகைப்படம்

ஒரு பிரபல நடிகரின் கால்ஷீட்டை வாங்கி ஒரு திரைப்படம் இயக்குவதே சிரமமான இன்றைய கால்கட்டத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு நடிகர்களை

சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி நாயகி

சிக்ஸ்பேக் வைத்திருக்கும் நடிகர்களையே விரல்விட்டு எண்ணிவிடலாம். சரத்குமார், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, ஆதி, அதர்வா போன்ற நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்புடன் திரையில் தோன்றியுள்ளனர்

அஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்

தல அஜித் என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் அஜித் ரசிகர்களுக்கு தாரக மந்திரம்....

நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் இந்தியாவின் முதல் திரைப்படம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது