ரஜினி வீட்டுக்கு கதை சொல்ல லேட்டாக போனதற்கு காரணம் இவர்தான்: நெல்சன்

  • IndiaGlitz, [Sunday,August 13 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல ரிசல்ட் பெற்று உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது ’நெல்சன் கதை சொல்ல வீட்டுக்கு வரும்போது லேட்டாக வந்தார் என்று காமெடியாக கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி வீட்டின் கேட்டிலிருந்து என் வீட்டுக்குள் வர ஒரு நிமிடம் கூட ஆகாது, ஆனால் அவர் செல்போனை நோண்டிக் கொண்டே ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தார்’ என்றும் கூறினார்.

மேலும் வீட்டிற்குள் வந்தவுடன் ஒரு நல்ல காபி கொடுங்கள் என்று கேட்டார். ஏதோ என் வீட்டிற்கு ஏற்கனவே பலமுறை வந்து மோசமான காபி சாப்பிட்டது போல் நல்ல காபி கொடுங்கள் என்று கூறியதாகவும் காமெடியாக பேசினார்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் நெல்சன் ’ரஜினிக்கு கதை சொல்ல லேட்டாக போனதற்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ளார்.

ரஜினிக்கு கதை சொல்ல செல்வதற்கு முந்தைய நாள் இரவு அனிருத் ஸ்டுடியோவில் அதிகாலை 4 மணி வரை இருந்ததாகவும் அதனால் தான் தன்னால் சரியான நேரத்திற்கு போக முடியவில்லை என்றும் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் ரஜினிக்கு கதை சொல்ல லேட்டாக நெல்சன் போனதற்கு காரணம் அனிருத் தான் என்று அவர் காரணம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தனி திரைப்படமாகிறதா 'ரோலக்ஸ்'? ரசிகர்களிடம் சூர்யா பகிர்ந்த மாஸ் தகவல்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய  'விக்ரம்' திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டி இருப்பார் என்பதும் இந்த கேரக்டர் 'விக்ரம்'

 'கருமேகங்கள் கலைகின்றன' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதே தேதியில் ரிலீஸாகும் சந்தானம் படம்..!

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தின் சென்சார் சான்றிதழ் நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

நடிகை மீனா இவ்வளவு சூப்பரா பாடுவாரா? அதுவும் சித்ராவுக்கு இணையாக.. வைரல் வீடியோ..

நடிகை மீனா மிகச் சிறந்த நடிகை என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் சிறப்பான பாடகி என்பது இப்போதுதான் வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

என்னுடன் நடிக்க பயந்தார்.. வெறும் வாய்ப்பேச்சு மட்டும் தான்: சித்தார்த் குறித்து எஸ்.வி.சேகர்..!

என்னுடன் நடிக்க சித்தார்த் பயந்தார் என்றும், அவர் வெறும் வாய் பேச்சு தான் என்றும் உதயநிதிக்கு இருந்த தைரியம் கூட சித்தார்த்துக்கு இல்லை என்றும் நடிகர் எஸ்வி சேகர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை

ரஜினி-விஜய் இணைந்து ஒரு படம்.. 4 படங்களின் 2ஆம் பாகம்.. நெல்சனின் பக்கா பிளான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு படத்தை இயக்க