செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' டிராக் லிஸ்ட்

  • IndiaGlitz, [Wednesday,November 23 2016]

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறவுள்ளது என்பதை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்காக யுவன்ஷங்கர்ராஜா நான்கு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார்.
1. குட் பேட் & அக்லி என்று தொடங்கும் முதல் பாடலை ஐஸ்வர்யா குமார் பாடியுள்ளார்.
2. கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட 'கண்ணுங்களா செல்லங்களா' என்ற பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்
3. 'மாலை வரும் வெண்ணிலவே' என்ற பாடலை தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
4. 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா' என்று தொடங்கும் பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் எஸ்.ஜே.சூர்யா பாடியுள்ளனர்.
இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இயக்குனர் செல்வராகவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூபாய் நோட்டு தடைக்கு பின் சக்திகாந்த் தாஸின் முக்கிய அறிவிப்புகள்

கடந்த 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்...

நான் அடிக்கும் சிக்ஸரை பிடிக்க தயாராகுங்கள். 'சென்னை 600028 II' குறித்து பிரேம்ஜி

வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னை 600028' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை...

ரிலையன்ஸ் ஜியோ சிம் வாடிக்கையாளருக்கு ரூ.28000 பில்?

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம்-ஐ வாங்க சென்னை உள்பட இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் மக்கள் ஆர்வம் காட்டினர்

'அஜித் 57' படப்பிடிப்பில் கலந்து கொள்வது எப்போது? விவேக் ஓபராய்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

பிரபல இயக்குனர் கே.சுபாஷ் காலமானார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.சுபாஷ் காலமானர்.