'நேர் கொண்ட பார்வை' முதல் காட்சி ஆரம்பம்: போனிகபூர் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 06 2019]

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை மறுநாள் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில், நாளை ஒரு சில நாடுகளில் பிரிமியர் காட்சிகளில் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு மின்னல் வேகத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சிங்கப்பூரில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு 'நேர்கொண்ட பார்வை' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக அறிவித்துள்ளார்

மறைந்த தனது மனைவி ஸ்ரீதேவிக்கு அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும், அந்த கனவு தற்போது நனவாகி உள்ளதாகவும் இந்த கனவு நனவாக அஜித்குமார், வினோத் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் கொடுத்த ஒத்துழைப்பிற்கு தனது நன்றியை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்

இந்த நிலையில் இன்று சிங்கப்பூரில் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் முதல் காட்சி நடைபெறுவதால் இந்த படத்தின் முதல் விமர்சனம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

சரவணன் விவகாரம்: கதறி அழுத கவின் - சாண்டி

பிக் பாஸ் வீட்டில் சரவணனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கவின் மற்றும் சாண்டி என்பது தெரிந்ததே. சேரன் விவகாரத்தின்போதே சரவணனுக்கு தான் இருவரும் ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

சரவணனை திடீரென வெளியேற்றிய பிக்பாஸ் முடிவு சரியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எவிக்சன் படலம் மற்றும் டாஸ்க் ஆகியவை ஜாலியாக சென்று கொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சியின் முடிவில் திடீரென சரவணன் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது

காஜல் அகர்வால் படத்திற்கு சென்சார் சிக்கல்: ரிவைஸிங் கமிட்டிக்கு செல்ல முடிவு!

பிரபல நடிகை கஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த 'கோமாளி' திரைப்படம் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாக உள்ளது

சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370வது பிரிவு ரத்து: கமல்ஹாசன் கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிவித்தார்.

ஆன்மீக ஆக்சன் படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்!

அரசியல் உலகில் 'ஆன்மீக அரசியல்' என்ற புதுமையான ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்த நிலையில் தற்போது திரையுலகில் 'ஆன்மீக ஆக்சன்' என்ற புது டிரெண்டை