close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்.. சமூக வலைதளங்களில் குவியும் கண்டனங்கள்..!

Sunday, November 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் ஃபைனல் போட்டியாளர்களாக வரும் தகுதி உடையவர் என்று பிரதீப் ஆண்டனி கருதப்பட்டார். நேர்மையாக பேசுபவர், உண்மையை பேசுபவர், நேருக்கு நேர் எதையும் பேசுபவர் என்று மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் வந்தது.

ஆனால் அவரை நேரடியாக எதிர்க்க முடியாத சக போட்டியாளர்கள் வாய்ப்பு கிடைத்த போது ரெட் கார்ட் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வெளியேற்றி விட்டனர். பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு ஆபத்து என்று கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் கூறியதை அடுத்து பெரும்பான்மை வாக்குப்படி கமல்ஹாசன் அவரை நேற்று வெளியேற்றி விட்டார்.

பிரதீப் வெளியேற்றப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து தெரிவித்து வருகின்றனர். பிரதீப் இடம் தன்னிலை விளக்கம் கேட்டு இருக்கலாம் என்றும் அவர் வெளியேற்றப்பட்டது நியாயமே இல்லை என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும் பிரதீப் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவார் என்று ஒரு சிலர் கூறினாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் கூறப்பட்டு வருகிறது. மொத்ததில் டைட்டில் வின்னருக்கு தகுதி உள்ள ஒரு போட்டியாளரை அநியாயமாக வெளியேற்றி விட்டதாகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பலரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment