close
Choose your channels

அட ஜேம்ஸ் கேமரூன் நீங்களா? இயக்குனரை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் ’நார்கோஸ்: மெக்சிகோ சீசன் 2’ என்ற படத்தின் டீசரை ஒட்டி இருப்பதாக ஒரு சில நெட்டிசன்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும் லோகேஷ் கனகராஜ் தனது பாணியில் இயக்கிய டீசருக்கு கமல் ரசிகர்கள் உள்பட சினிமா ரசிகர்கள் அனைவரும் வரவேற்பு தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’திரெளபதி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் ’விக்ரம்’ படத்தின் டீசரையும் நார்கோஸ்: மெக்சிகோ சீசன் 2’ படத்தின் டீசரையும் அடுத்தடுத்து பதிவு செய்து ’சில்லரைய சிதற விட்டது தப்பாகிடுச்சே’ என்று கலாய்த்துள்ளார்.

இயக்குனர் ஜி மோகனின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளது சுவராசியமாக உள்ளது. விக்ரம் மற்றும் நார்கோஸ்: மெக்சிகோ சீசன் 2’ஆகிய இரண்டு படங்களின் டீசர்களை ஒப்பிடும்போது டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடும் காட்சியை தவிர வேறு எதுவும் பெரிய ஒற்றுமை இல்லை. இவ்வாறு ஒரு சில காட்சிகளின் ஒற்றுமையை மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த டீசரும் காப்பி என்று கூறுவது சக இயக்குனர் ஒருவருக்கு அழகா? என்ற கேள்வி எழுகிறது.

சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வாங்கிக் கட்டிக் கொண்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாருக்கும், கமல்ஹாசன் போன்ற திரையுலக மேதையின் படத்தை விமர்சிக்கும் ஜி மோகனுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை என்றே நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து டிவிட்டர் பயனாளிகள் பதிவு செய்தவர்கள் பின்வருமாறு:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment