close
Choose your channels

அதிபயங்கரமான புதுவரை கொரோனா வைரஸ் பரவல்… WHO தகவல்!

Friday, November 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா போன்ற நாடுகளில் B.1.1529 எனப்படும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவிவருவதாகவும் அந்த வைரஸ் டெல்டா வைரஸைவிட மோசமானது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த டிசம்பர் 2019 இல் பரவத் துவங்கிய கொரோனா வைரஸின் மரபணுவில் பலமுறை மாற்றங்கள் ஏற்பட்டு உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றியது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ்கள் அதிக அளவில் அவ்வபோது அதிக நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி உருமாறிய ஒன்றுதான் டெல்டா வகை கொரோனா வைரஸ். இந்த வைரஸின் உருமாற்றத்தைப் பார்த்து உலகமே நடுங்கியது. காரணம் டெல்டா வைரஸின் பரவல் தன்மை அதிகளவில் இருந்தது.

தற்போது டெல்டா வைரஸைவிட மோசமான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். முதலில் தென் ஆப்பிரிக்காவின் கௌடெங் எனும் மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் இதுவரை அந்நாட்டில் 77 பேருக்கு நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போட்ஸ்வானாவில் 4 பேருக்கும் ஹாங்காங்கில் ஒருவருக்கும் இந்த வகை வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே உருமாறிய B.1.1 எனப்படும் கொரோனா வைரஸில் இருந்து மேலும் உருமாற்றம் கொண்ட இந்த வைரஸ் B.1.1529 தற்போது வேகமாக பரவிவருகிறது. மேலும் இந்த புதியவகை வைரஸ் சீனாவில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது என்றும் அதன் ஸ்பைக் புரதம் 32 தடவைக்கும் மேலாக உருமாற்றம் பெற்றிருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் மரபணு 50 வகைகளில் உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக அந்த நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தை இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகள் ரத்து செய்திருக்கின்றன. இதனால் இந்தியாவிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட இருக்கின்றன.

B.1.1529 எனும் புதிய உருமாறிய வைரஸ் அதன் மரபணு மாற்றத்தின் அளவு மற்றும் உருமாறிய தன்மை காரணமாக அதிக ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் கருதிவருகின்றனர். மேலும் டெல்டாவைவிட இது ஆபத்தானதாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் B.1.1529 வைரஸ் குறித்த முழுமையான ஆராய்ச்சி முடிவு இன்னும் வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.