close
Choose your channels

உக்ரைனில் நியூட் போட்டோஷுட்....! சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகிகள்....!

Saturday, May 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துருக்கி, உக்ரைனில் ஆடம்பர படகில், 6 மாடல் அழகிகள் நியூட் போட்டோஷுட் மற்றும் ஸ்டண்ட் செய்ததால், அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

துபாயில் 'Butt Squad' என்ற தலைப்பில் நியூட் போட்டோஷுட் செய்த மாடல்களை முன்மாதிரியாக கொண்டு, துருக்கியில் உக்ரைன் மாடல்கள் இந்த செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி நியூயார்க் போஸ்ட் நாளேட்டில் வெளியாகி உள்ளது.

உக்ரைனில் இக்காலம் புனிதமாக கருதப்படும் ரமலான் காலம் ஆகும். அதுவும் ஊரடங்கு சமயத்தில் மாடல் அழகிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் துருக்கிய சேர்ந்த நாளேட்டில் மாடல்கள் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈஸ்ட்2வேஸ்ட் செய்தித்தளம் இதுகுறித்து கூறியிருப்பதாவது,
ஆடம்பர படகில் 6 மாடல் அழகிகளும், 2 ஆடவர்களுக்கு இருந்துள்ளனர். படகில் அவர்கள் பலவிதமான நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த செய்தியானது துபாய் மாடல் அழகிகளின் நிர்வாண போட்டோஷூட் -உடன் ஒப்பிடப்பட்டு வெளியானது.

இதுகுறித்து ஸ்புட்னிக் நியூஸ் தளத்திற்கு அதில் பங்கேற்ற மாடல் ஒருவர் பேட்டியளித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது,

"பொதுமக்கள் மத்தியில் இதுபோன்று போட்டோஷூட் எடுக்கக்கூடாது என்பதற்காக, நடுக்கடலில் படகில் புகைப்படங்கள் எடுத்தோம். அருகில் வேறு படகில் இருந்தவர்கள் யாரோ எங்களை புகைப்படங்கள் எடுத்து ஷேர் செய்தனர், அவை தான் வைரலானது என கூறியிருந்தார்.

காணொளி செய்தி மூலமாக, ஜூலியா வெட்ரோவா என்ற மாடல் அழகி கூறியது,

"துபாய் பால்கனி போட்டோஷூட் மூலம் இஸ்லாமிய நாடுகளில் நிர்வாண புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்பதை அறிந்துகொண்டோம். மாடல்கள் யாரவது துருக்கி போன்ற வேறு இஸ்லாம் நாடுகளில் இதுபோன்ற போட்டோஷூட் எடுக்கும் எண்ணம் இருந்தால் அதை கைவிட்டுவிடுங்கள். நாங்கள் செய்த தவறு, எங்களுக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது" என அதில் தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சையை தொடர்ந்து ஆறு மாடல்களிடமும் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.