வானத்தைத் நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு… போர்க்களமாக மாறிய புத்தாண்டு கொண்டாட்டம்… அதிர்ச்சி வீடியோ!!!

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

 

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்றுவரை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பெரும்பாலான உலக நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவித்து இருந்தன. ஆனால் தற்போது லெபனான் நாட்டில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம் மற்ற உலக நாடுகளை கடும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தப் புத்தாண்டின்போது லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரம் முழுவதும் உள்ள மக்கள் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி இருக்கின்றனர். மேலும் இவர்கள் வானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியால் ஒட்டுமொத்த வானமும் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சில அதிர்ச்சி வீடியோக்களும் வெளியாகி இருக்கின்றன.

அதோடு இந்தத் துப்பாக்கிச் சூட்டின்போது லெபனான் நோக்கி வனாத்தில் பறந்து கொண்டு இருந்த 4 விமானங்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து விட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விமானங்கள் அனைத்தும் லெபனான் மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்க்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல அந்நாட்டின் கிழக்கு பகுதியான பால்பெர்க்கிலும் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி இருக்கின்றனர். இந்தக் கொண்டாட்டத்தின்போது அகதிகள் முகாமில் தங்கி இருந்த சிரிய நாட்டை சேர்ந்த ஒருவர் மீது குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

More News

விஸ்வரூபம் நாயகி பூஜா குமாருக்கு… கல்யாணமாகி குழந்தையா??? ரசிகர்கள் அதிர்ச்சி!!!

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். இ

வெண்மையில் ஜொலிக்கும் மாஸ்டர் பட நாயகி… வைரல் புகைப்படம்!!!

பூக்கள் என்றாலே மென்மைதான். அதுவும் வெள்ளைநிற பூக்கள் இன்னும் அதிகமான தூய்மையையும் அமைதியையும் சேர்த்து கொடுக்கும்.

புத்தாண்டுக்கு பிக்பாஸ் போட்டியாளர் கொடுத்த இசை விருந்து: வைரலாகும் வீடியோ 

உலகமே நேற்று புத்தாண்டு தினத்தை கொண்டாடியது என்பதும் பல தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நிஜ ஜோடியாக மாறும் சீரியல் ஜோடி: ரசிகர்கள் வாழ்த்து!

சீரியல்களில் ஜோடியாக நடித்து அதன்பின் நிஜ ஜோடியாகும் நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். சமீபத்தில்கூட 'ராஜா ராணி' தொடரில் நடித்த கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகியோர் காதலித்து திருமணம்

ரியோ மனைவிக்கு பாராட்டு தெரிவித்த தமிழ் நடிகை!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் உறவினர்கள் வருகை தந்தனர் என்பதும் சென்டிமென்ட், மகிழ்ச்சி, கலகலப்பு ஆகிய அனைத்து உணர்வுகளும் இந்த வருகையின்போது இருந்தது என்பதையும் பார்த்தோம்