close
Choose your channels

விஸ்வரூபம் நாயகி பூஜா குமாருக்கு… கல்யாணமாகி குழந்தையா??? ரசிகர்கள் அதிர்ச்சி!!!

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஸ்வரூபம் நாயகி பூஜா குமாருக்கு… கல்யாணமாகி குழந்தையா??? ரசிகர்கள் அதிர்ச்சி!!!


 

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு இவர் ஒரு அமெரிக்க-இந்திய நடிகை என்பதும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் கடந்த 20 வருடங்களாக பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்துக்கும் இவர் சொந்தக்காரர்.

கடந்த 2000 ஆவது ஆண்டில் காதல் ரோஜாவே படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழி படங்களிலும் வலம் வந்தார். தமிழில் இவர் நடித்த விஸ்வரூபம் பெரும் ஹிட் அடித்த நிலையில் விஸ்வரூபம்-2 அடுத்து உத்தமவில்லன் எனத் தொடர்ந்து கமலுக்கு ஜோடியாக நடித்தார். இதனால் சில சர்ச்சைகளும் வெடித்தன. இந்நிலையில் நடிகை பூஜா குமார் தொழில் அதிபர் விஷால் ஜோஷி என்பவருடன் உறவில் இருப்பதாகச் சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷால் ஜோஷி தனது சோஷியல் மீடியாவில் நடிகை பூஜாகுமாரோடு இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அந்தக் குழந்தைக்கு நாவ்யா எனப் பெயரிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார் இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் “ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போது மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் உற்சாகம் அடைந்துள்ளோம். எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பதற்கு குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன்” என்று விஷால் ஜோஷி தனது மகிழ்ச்சியையும் பதிவு செய்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.