கொரோனா விடுமுறையில் ஆன்லைனில் சினிமா கோர்ஸ் படிக்கும் ஜெயம் ரவி நாயகி!

  • IndiaGlitz, [Monday,April 20 2020]

இந்த கொரோனா விடுமுறையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வேடிக்கையான வினோதமான நகைச்சுவையான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பொழுதை போக்கி வருகின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவி பட நாயகி ஒருவர் ஆன்லைனில் சினிமா கோர்ஸ் படிக்கும் படிப்பை படித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் லட்சுமண் இயக்கிய ’பூமி’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருபவர் நிதிஅகர்வால். இவர் ஏற்கனவே தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிரபலமானவர் என்பது தெரிந்ததே. ஜெயம் ரவியுடன் நிதி அகர்வால் நடித்த ’பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் திடீரென கொரோனா விடுமுறை வந்துவிட்டது.

இந்த விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க முடிவு செய்த நிதிஅகர்வால், நியூயார்க் அகாடமி ஒன்றில் ஆன்லைன் கோர்ஸில் இணைந்துள்ளார். இதில் அவர் நடிப்பு, இயக்கம் மற்றும் திரைக்கதை தொடர்பான கோர்ஸ்களை படித்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே பல தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இதே அகாடமியில் நடிப்பு உள்பட பல்வேறு கோர்ஸ்கள் படித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை எழுதுவதும் இயக்கம் உள்ளிட்ட கோர்ஸ்களையும் நிதி அகர்வால் படித்து வருவதால் விரைவில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

கொரோனா பரிசோதனைகள் - ரேபிட் கிட் : PCR இரண்டுக்கும் என்ன வித்தியாசம்???

ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா என்பதை உறுதிச் செய்வதற்கு உலகம் முழுவதும் இரண்டு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஜோதிகா படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக் பயணம் செய்த தல அஜித்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்த வரும் 'வலிமை' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

கொரோனா வார்டில் பணிபுரிந்து வீடுதிரும்பிய நர்ஸ்க்கு ஆரத்தி வரவேற்பு

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தி அதிலிருந்து மக்களை காப்பதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள்,

கொரோனா விடுமுறையில் 'கொலகொலயாய் முந்திரிக்காய்' விளையாடிய பிரபலம்

கொரோனா விடுமுறை காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் திரையுலகினர் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சும்மா இருக்கின்றனர்.