அசோக்செல்வனின் அடுத்த படத்தில் நாயகியாகும் விஜய்சேதுபதி பட நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,May 05 2020]

நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ மை காட்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள நடிகர் அசோக்செல்வன் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்தரனிடம் உதவி இயக்குனராக இருந்த சுவாதினி என்பவர் கூறிய கதை அவருக்கு பிடித்து விட்டதால் இவரது இயக்கத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளார்

ரொமான்ஸ் மட்டும் காமெடி கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக்செல்வன் ஜோடியாக நிகாரிகா என்பவர் நடிக்கவுள்ளார் இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அசோக் செல்வன் மற்றும் நிஹாரியா இணையும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘ஓ மை கடவுளே’ படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெற இருப்பதாகவும் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
 

More News

கொரோனா பரவல் தடுப்பு: உலகின் எந்தெந்த நாடுகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்???

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. எனவே நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம்,

கொரோனா: BGC காசநோய்த் தடுப்பூசியை மனிதர்கள்மீது  பரிசோதிக்கும் அமெரிக்கப் பல்லைக்கழகம்!!!

முன்னதாக காசநோய் தடுப்பூசி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்திலும் திறக்கப்படுகிறது டாஸ்மாக் கடைகள்: அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை சமீபத்தில் அறிவித்தது.

மதுபானம் வாங்க பெண்கள் வரிசை: பிரபல இயக்குனர் விமர்சனம்

நாடு முழுவதும் இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

ஒரே நாளில் 500க்கும் மேல் பாதிப்பு எதிரொலி: கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.