இரண்டு படங்களில் ஒரே கேரக்டரில் நடிக்கும் நிகில்கல்ராணி

  • IndiaGlitz, [Thursday,November 05 2015]

ஜி.வி.பிரகாஷுடன் 'டார்லிங்' படத்தில் நடித்த நடிகை நிகில்கல்ராணி, தற்போது பாபிசிம்ஹாவின் 'கோ 2' படத்தில் பத்திரிகை நிருபராக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் நிகில்கல்ராணி மீண்டும் ஒரு படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

'காஞ்சனா 2' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் ராகவா லாரன்ஸ் தற்போது 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'பட்டாஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஐ.பி.எஸ் அதிகாரியாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள இந்த படத்தில் நிகில் கல்ராணி, பத்திரிகை நிருபராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 20 முதல் தொடங்கவுள்ளதாகவும், நிகில் கல்ராணி இந்த படத்தில் இம்மாத இறுதியில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஜீவா, காஜல் அகர்வால் நடித்து வரும் 'கவலை வேண்டாம்' என்ற படத்திலும் நிகில் கல்ராணி, முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா

கடந்த வருடம் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது இணைந்துள்ளார்...

மலேசியாவில் இருந்து சென்னை திரும்புகிறாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

'எந்திரன் 2' படத்தில் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்?

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து தற்போது ஷங்கர் 'எந்திரன் 2' படத்திற்கான...

தூங்காவனம் - கபாலி ஒரு அபூர்வ ஒற்றுமை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

நயன்தாராவின் ரீமேக் படத்தில் அஜீத்?

'சிறுத்தை சிவா' இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் அஜீத்தின்....