பிரபுதேவாவுடன் திருமணமா? நடிகை நிகிஷா பட்டேல் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

பிரபல நடிகர் பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புவதாக சமீபத்தில் நடிகை நிகிஷா பேட்டி ஒன்றில் கூறியிருந்ததாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ஏற்கனவே நயன்தாரா உள்பட ஒருசில நடிகைகளுடன் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் பிரபுதேவாவுடன் திருமணம் என்று நிகிஷா கூறியது உண்மையா என்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நிகிஷா கூறியதாவது:

கடந்த சில நாட்களாக நான் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மை இல்லை. நான் பிரபுதேவா போன்ற ஒரு நபரை திருமணம் செய்வேன் என்று தான் கூறினேன். நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இந்த வதந்தி பரவியுள்ளதாக நிகிஷா விளக்கமளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் பிரபுதேவா குடும்பமும் தன்னுடைய குடும்பமும் மிகவும் நெருக்கமானது என்று வெளிவந்த தகவலிலும் உண்மையில்லை என்றும், பிரபுதேவா தன்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர் மட்டுமே உண்மை என்றும் நிகிஷா கூறினார். தற்போது தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா இயக்கும் தமிழ் படத்தில் நடித்து வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

More News

அஜித்தை நேரில் பார்த்த மதுரை ரசிகர்களின் நெகிழ்ச்சியான பதிவு

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அவரை நேரில் பார்க்க தமிழகத்தின்

நேற்றைய ரிலீஸ் படங்களின் முதல் நாள் வசூல் விபரம்

ஒவ்வொரு வாரமும் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழுவின் பரிந்துரையின்படி மூன்று திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில்

பிரபல நடிகையை 2வது திருமணம் செய்த கமல் பட இசையமைப்பாளர்

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'தசாவதாரம்' படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா, தொலைக்காட்சி நடிகை சோனியா கபூரை நேற்றிரவு திடீரென திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசனின் 'பிக்பாஸ் 2' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

திருமணத்திற்கு பின் சமந்தாவின் ஹாட்ரிக் வெற்றி

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் திருமணத்திற்கு பின்னர் வாய்ப்பு குறைந்துவிடும். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படங்கள் ஹிட்டாகுவது அரிதாகவே இருந்து வந்துள்ளது.